அடிமை கணவன்
வாசலில் ஸ்கூட்டியின் சத்தம் கேட்டதும் வேகமாக ஓடிவந்து கேட்டைத் திறந்தேன்.அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மனைவி உள்ளே வந்தாள்.நான் வண்டியைத் தள்ளி காம்பவுண்டுக்குள் நிறுத்தி லாக் செய்துவிட்டு அவளின் லஞ்ச் பையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தேன். "லஞ்ச்பாக்ஸை க்ளீன் பண்ணி வச்சிட்டு, ஸ்ட்ராங்கா டீ போட்டு எடுத்துட்டு வா" ஆணையிட்டுவிட்டு என் மனைவி மாடிக்கு சென்று விட்டாள். ஆபீஸில் மதியம் சாப்பிட்ட லஞ்ச் பாக்ஸை சுத்தமாக கழுவி வைத்துவிட்டு அவள் சொன்னபடியே ஸ்ட்ராங்காக ஒரு டீ போட்டு எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். மாடியின் படுக்கையறை கட்டிலில் அமர்ந்தபடி டீயை வாங்கி உறிஞ்சிய அவள்... "ம் சொல்லு இன்னைக்கு என்னென்ன செஞ்சே..?; "நீங்க ஆபீஸ் போனதுக்கப்புறம் வீட்டைக்கூட்டி சுத்தமா கழுவி விட்டேன்" (நாங்கள் தனியாக இருக்கும்போது என் மனைவியை நீங்க, வாங்க, மேடம் என்று மரியாதையாக அழைக்க வேண்டும் என்பது அவளது கட்டளை) "ம்" "அழுக்கு துணிகளையெல்லாம் துவைச்சு காயப்போட்டு எடுத்து அயர்ன் பண்ணி வச்சேன்" "குட் , அப்புறம்..." "கடைக்குப்போய் ஜாமான் காய்கற...